நீட் தேர்வு ஒத்திவைப்பு…! சுப்ரீம் கோர்ட்டில் போடப்பட்ட திடீர் வழக்கு..!!
நீட் முதுநிலை தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி அன்று நடைபெற இருந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.. அதற்கு காரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழத்தொடங்கியது.. மற்றும் அதனை சுற்றி அடுத்தடுத்து சர்ச்சைகள் எழத்தொடங்கியுள்ளது. அதே சமயம், நீட் தேர்வை மீண்டும் தள்ளி வைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மற்றும் தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியத்தினால் நடத்தப்படவுள்ளது. இந்த ஆண்டிற்கான முதுகலை நீட் தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெற இருந்தது. இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவு ஆகியவற்றால் பெரும் சர்ச்சைகள் வெடித்தது முதுகலை நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன் நாளில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அன்று ஒத்திவைக்கப்பட்ட இந்த முதுநிலை நீட் தேர்வு இந்த ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வானது காலை மற்றும் மாலை என இரண்டு பாகங்களாக நடைபெறவுள்ளது..
2 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில். தேர்வாளர்களுக்கு தேர்வு மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் நீட் ஒதுக்கப்பட்டுள்ளது.. சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தேர்வாளர்கள் இருப்பது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சென்டர் எதுவென்று இன்று காலை 10மணிக்கு மேல் வெளியாகும் என அறிவிக்கப்பட உள்ளது. தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகளைத் தடுக்கவே தொலை தூரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாலும், குறுகிய காலத்தில் அறிவிப்பைக் கொடுத்ததால், மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது மிகவும் கடினமாகிவிட்டது என்று மனுதாரர் விஷால் சோரன் வலியுறுத்தி உள்ளார்.
2லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வில் பங்கேற்க உள்ள நிலையில் 185 தேர்வு நகரங்களில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இதனால் ரயில் டிக்கெட் கிடைக்காததுடன், விமானக் கட்டணங்கள் மிக அதிக அளவில் உள்ளது. எனவே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கு திட்டமிட வசதியாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அனைத்து தேர்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாளை எதிர்கொள்ளும் வகையில், 2 ஷிப்ட்களாக இல்லாமல், ஒரே நேரத்தில் தேர்வு எழுத உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணை எப்பொழுது வரும் என்று தெரியாததால் மனு அளித்துள்ள மாணவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..