நீட்விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்..!
தமிழகத்தில் நீட் தேர்வு என்ற ஒன்றால் மாணவர்களின் உயிர் பரிபோய் கொண்டு இருக்கிறது. அப்படி மனித உயிருக்கு ஆபத்து விளைவித்து கொண்டு இருக்கும், நீட் தொடர்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். என குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் மாணவி அனிதா முதல் ஜெகதீஷ் வரை ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் பாதித்தது மட்டுமின்றி பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் மாணவன் ஜெகதீஸ் இறந்த தகவலை கேட்டு அவரின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பல்வேறு கட்சியினரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்வதற்காக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.., அந்த தீர்மானம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தும்.., அதை அப்படியே பத்திரப்படுத்தி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய பின்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த தீர்மானத்தை ஆர்.என்.ரவி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் த்ரெளபதி முர்முவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மருத்துவ படிப்பில் சேருவதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை, நகர்ப்புற மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெரும் மாணவர்களுக்கு நீட் சாதகமாக இருக்கலாம்.., ஆனால் ஏழை எளிய மாணவர்களுக்கு அது எதிராக உள்ளது.
மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக மாணவர்கள் விரும்பும் மருத்துவம் அடிப்படையாக இருக்கும் இந்த மருத்துவ படிப்பு +2 வின் அடிப்படையிலேயே நடக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய இந்த நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாணவர்களின் உயிர் இழப்பிற்கு காரணாமாக இருக்கும் நீட் ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு குடியரசு தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த விவகாரம் தாமதமாகி கொண்டே போனால் பல மாணவர்கள் உயிர் பாதிக்கப்படும். எனவே அதை கருத்தில் கொண்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடித்த எழுதியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..