குற்றம் நடப்பதற்கு முன்பே குற்றவாளிகளை கண்காணித்து குற்றங்களை தடுப்பது தான் எங்களின் முதற்பணி என சென்னை காவல்துறை ஆணையர் சந்திப்ராய் ரத்தூர் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல்துறை ஆணையர் சந்திப்ராய் ரத்தூர் அண்ணாநகர் தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
சென்னையில் கொலை குற்றங்களை தடுக்க முன்கூட்டியே குற்றவாளிகளை கண்காணித்து தடுக்கக்கூடிய பணிகளை காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவகிறது. சென்னை பட்டினப்பாக்கம் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை மூன்று குழுக்கள் அமைத்து சம்பந்தப்பட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னர், இ – சலான் மோசடி குறித்து வாகன ஓட்டிகளுக்கு பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகும் சென்னையில் இருக்கக்கூடிய 12 காவல் மாவட்டங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் அண்ணாநகரில் மிக சிறப்பாக நடைபெற்றதாகவும், பொதுமக்கள் தங்களது குறைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தால் அந்த புகார் குறித்து உடனடியாக தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.