ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி ஸ்ரீ துலுக்கசூடாமணி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி ஊர்வலம்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி ஸ்ரீ துலுக்க சூடாமணி அம்மன் திருக்கோவிலானது உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஆவணி 6ம் நாள் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகின்ற ஆவணி 14-ஆம் நாலாம் தேதி முதல் யாககால பூஜையும்,2ம் யாக கால பூஜையும் தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில் கும்பாபிஷேக விழாவானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 3-ம் தேதி காலை 8 மணி அளவில் கும்பாபிஷேக விழாவானது நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமானது விநாயகர் கோவில் இருந்து தொடங்கி புதுப்பட்டி முக்கிய பகுதியான கிழக்கு தெரு,வடுகம் சாலை, புதுத்தெரு உள்ளிட்ட வழியாக தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமனது இறுதியாக ஸ்ரீ துலுக்க சூடாமணி அம்மன் கோவிலுக்கு சென்றடைந்தது. ஊர்வலத்தில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்…