தமிழக அரசு கொண்டுவந்துள்ள பள்ளி குழந்தைகளின் காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டனம் ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
தமிழக அரசு பள்ளி குழந்தைகளின் நலன் கருதி காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கியது. இது பள்ளி குழந்தைகள் பெற்றோர்களுக்கு பெறும் வரவேற்பு தந்தது. இதனை அருவருக்கும் படியாக தினமலர் நாளிதழ் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி தினமலர் நாளிதழில் பிரசரிக்கப்பட்டதை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ராமலிங்கம்,
மற்றும் களப்போராளிகள் கலந்து கொண்டு தினமலர் நாளிதழை தடை செய்ய வேண்டும். வந்தேறிய பார்ப்பானிய கூட்டமே வெளியேற வேண்டும். செய்தி வெளியிட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழப்பினர். இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தினமலர் அலுவலகத்தின் மீது சாம்பார் அடிக்க முயற்சி செய்தபோது இதனை அறிந்த காவல்துறையினர் கீழே பிடுங்கி சாம்பார் பாக்கெட்டுகளை போட்டார்கள். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post