20% கட்டண சலுகையுடன் வாட்ஸ் அப் வழியாக மெட்ரோ டிக்கெட்டை பெரும் புதிய வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
PAYTM, AIRTEL நிறுவனங்களின் ஆப் மூலமாகவும் மெட்ரோ டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும் புதிய வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்
மக்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் மெட்ரோ ரயிலில் அடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குள் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்படும் என மெட்ரோ இரயில் மேலான் இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்.
சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ் அப் வழியாக மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும் புதிய வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார். மெட்ரோ இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி,அர்ஜுனன் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி?
- பயணிகள் தங்களுடைய வாட்ஸ் அப் எண்ணிலிருந்து “83000 86000” என்ற எண்ணுக்கு ‘HI’ என குறுஞ்செய்தி அனுப்பினால் அடுத்த நொடியே பயண சீட்டு, முன்பதிவு பயணம் தேர்ந்தெடுத்தல், மெட்ரோ நிலையங்கள் கண்டுபிடித்தல் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கப்பெறும்.
- அதில் ‘பயண சீட்டு தேர்ந்தெடுத்தல்’ என்பதை கிளிக் செய்து தனக்கான பயண விவரங்களை அதில் பதிவிட்டு உடனே கட்டண விவரங்கள் கிடைக்க பெறும்.
- அதற்கான தொகையை யூபிஐ மூலமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களின் மூலமாக கட்டணத்தை செலுத்தினால் சில நொடிகளில் கியூ ஆர் கோட் டிக்கெட் நமது வாட்ஸ் அப் எண்ணுக்கு வழங்கப்படுகிறது.
- ஒரே நேரத்தில் ஆறு டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும் அதே வேளையில் பயணம் தொடங்கியதில் இருந்து 2 மணி நேரத்தில் காலாவதியாகும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ மேலாண் இயக்குனர் சித்திக் கூறுகையில், “மெட்ரோ பயணிகளின் வசதிக்காக பல வழிகளில் பயணச்சீட்டு பெறுவதற்கு மெட்ரோ வழி வகை செய்துள்ளது அதன் ஒரு பகுதியாக வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் புதிய வசதியை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர பேடிஎம்,ஏர்டெல் நிறுவனங்களில் அப்ளிகேஷனில் மெட்ரோ டிக்கெட்டை பெற்றுக் கொள்ளுவதற்கான வசதிகளையும் திட்டமிட்டு வருகிறோம் கூடிய விரைவில் அந்த புதிய வசதியும் ஏற்படுத்தப்படும்” என்றார்.
இந்த அனைத்து புதிய வசதிகளும் மக்களின் எளிய பயணத்திற்காக ஏற்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப் மூலமாக எடுக்கப்படும் டிக்கெட் ஒரு நாள் முழுவதும் செல்லும் ஆனால் ஒரு முறை அந்த டிக்கெட்டை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அந்த டிக்கெட் காலாவதி ஆகிவிடும் அப்படி நேரத்தை கடந்து பயணிக்கும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும்.
சர்வர் பிரச்சினையால் டிக்கெட் பெற முடியவில்லை என்றால் மற்றொரு நிர்வாகம் பணத்தை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கும்.
மேலும் வாட்சப் மூலம் ஒரே நேரத்தில் ஆறு டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் அந்த 6 டிக்கெட்டுகளுக்கும் தனித்தனி கியூ ஆர் வழங்கப்படும் அதோடு இதனை நண்பர்கள் குடும்பத்தினர் என யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்து பயணிக்கக்கூடிய வகையிலான Transfer Ticket System ஆகும்.
மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கக்கூடிய மக்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்கு பயணிக்கக் கூடிய இலவச மற்றும் கட்டண சலுகையிலான Promotional tickets வழங்க திட்டமிட்டுள்ளோம் அது வரும் காலங்களில் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும்.
மக்களின் வரத்து நாளொன்றுக்கு இரண்டு லட்சத்தை கடந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் கூடுதல் ரயில்கள் மற்றும் பெட்டிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். செயல்படுத்த மூன்றாயிரம் நான்காயிரம் கோடி தேவைப்படும் என்பதால் உடனே செய்யமுடியாது என தெரிவித்தார்.
மேலும் நான்கு பெட்டிகளோடு இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இனைப்பதற்கு அடுத்த ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார்.
முன்பை விட மெட்ரோ பயணிகளின் படைத்த அதிகரித்துள்ளது நிகர லாபம் அதிகரித்துள்ளது அதற்கு ஏற்ப ஆறு மாதத்திற்கு முன்பாக மின்சார கட்டணங்களும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது எனவே செலவும் வருமானமும் சரிசமமாக உள்ளது.
கோவை மற்றும் மதுரை மெட்ரோவின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் விரைவில் அதனை சமர்ப்பித்து அரசு ஒப்புதல் அளித்தவுடன் அதற்கான பணிகளை தொடங்க உள்ளோம். அதோடு சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான நீட்டுக்கு பணிகளும் அரசு ஒப்புதலுக்கு பிறகு தொடங்கப்படும் என்றார்.
Discussion about this post