துபாயில் அமீரகத்தின் மிகப் பெரிய ஜாக்பாட் திருவிழா நேற்று நடந்தது. இதில், சென்னையை சேர்ந்த இன்ஜீனியருக்கு 230 கோடி பரிசு கிடைத்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீராம் ராஜகோபாலன். ஓய்வு பெற்ற இன்ஜீனியரான இவர் துபாயில் பணி புரிந்து இந்தியா திரும்பியவர். கடந்த மார்ச் 16ம் தேதி துபாயில் 230 கோடி ஜாக்பாட்டுக்கான டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதற்கு முன்னர் பலமுறை டிக்கெட் வாங்கியிருந்தாலும் அவருக்கு பரிசு விழுந்ததில்லை. ஆனால், இந்த முறை ஜாக்பாட் பரிசாக 230 கோடி விழுந்துள்ளது. கழிவுகள் போக 200 கோடி வரை அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 230 கோடி முதல் பரிசாக கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை 50 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.1000) ஆகும்.
இது குறித்து ஸ்ரீராம் ராஜகோபாலன் கூறுகையில், இது மிகப் பெரிய தொகை. எனக்கு 70 சதவிகிதம் மகிழ்ச்சியாக இருந்தாலும் 30 சதவிகிதம் பயமாக உள்ளது. எனினும், எனது குழந்தைகளுக்கு இது மிகப் பெரிய பலமாக இருக்கும். என்னால் முடிந்த வரை ஏழைகளுக்கும் உதவுவேன் என்கிறார்.