இந்தியாவின் மக்கள் ஜனாதிபதி என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது. ரமேஸ்வரம் முதல் ராஷ்ட்ரபதி வரை சென்ற மிஷைல் மேன் என்ற செல்லப் பெயர் கொண்ட அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்துக்க கலாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கலாம் வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். படத்தே ஆதி புருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்கவுள்ளார்.
இது தொடர்பாக ஓம் ராவத் கூறுகையில், கல்வி மற்றும் கண்டுபிடிப்பின் உன்னதத்தை உலகுக்கு விளக்கியவர் அப்துல் கலாம். அரசியலுக்கு அப்பாற்பட்ட அற்புதமான மனிதர். இந்த படம் உலக இளைஞர்களை குறிப்பாக தென் மாநில இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவராவதற்கு முன்னர் அப்துல்கவலாம் டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரோ தலைவராக பணியாற்றினார். இந்தியாவின் அக்னி 1 ஏவுகணையை கண்டு பிடித்தவர். சிந்தூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணைக்கு விதை போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.