செங்கல்பட்டு பரனுர் டோல்கேட் இனி “பாஜக டோல்கேட்”..!! சு.வெங்கடேசன் எம்.பி உடைத்த உண்மைகள்..?
செங்கல்பட்டு அருகேயுள்ள பரனுர் டோல்கேட்டில் நடந்த மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது, பரனுர் டோல்கேட்டில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் பெரும் மோசடி நடந்துள்ளது.
ஆகஸ்ட் 2019 முதல் ஜூன் 2020 வரை பரனுர் டோல்கேட்டில் 1.17 கோடி வாகனங்கள் பயணம் செய்துள்ள நிலையில் அதில் 62.37 லட்சம் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை, அந்த ஒரு ஆண்டில் மட்டும் 1.17 கோடி வாகனங்களில் 62 லட்சம் வாகனத்திடம் இருந்து கட்டணம் வசூல் செய்யவில்லை என்பது பேர் அதிர்ச்சி குறியது.
பரனூர் டோல்கேட் வழியாக சென்ற 53.27% வாகன உரிமையாளர்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாததும், சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. ஆத்தூர் டோல்கேட்டில் 36.43% வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை என கணக்கு எழுதப்பட்டுள்ளது.
அதிலும் அரசியல் பிரமுகர்களில் “பாஜக” வினர் கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கையாக வைத்துள்ளனர். எந்த வாகனம் சென்றாலும் நாங்கள் பாஜகவினர் என சொல்லி கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளனர். கட்டணம் கேட்டால் சுங்கசாவடி பணியாளரை தகாத வார்த்தைகளில் பேசிவிட்டு சென்றதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நவீன ஊழலின் அடையாளமாக இருக்கும் பரனூர் சுங்கச்சாவடி எம்.பி சு.வெங்கடேசன் . விமர்சித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..