பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான 11 வழக்கு..! உயர்நீதி மன்றத்தின் சொன்ன தீர்ப்பு..?
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுகூட்டத்தில் அறநிலையதுறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசிய குற்றத்திற்காக நாகர்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி தந்தை பெரியார் சிலையே உடைப்பேன் என ட்விட்டர் போஸ்ட் செய்துள்ளார், மேலும் கனிமொழி எம்.பி.யை தரக்குறைவாக பேசிய குற்றத்திற்காகவும் எச்.ராஜாமீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்தும் எச்.ராஜா மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, அந்த 11 வழக்கையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் எச்.ராஜா மனுதாக்கல் செய்திருந்தார்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது. வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Discussion about this post