கள்ளக்காதல் மோகம்..! 2 பேர் தற்கொலை..! பின்னனியில் வெளிவந்த அதிர்ச்சி..!
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் 5-வது பிளாக்கை சேர்ந்த 23 வயதான பெண் செல்பியா மேரி.இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.
இதேபோல் செம்மஞ்சேரியை சேர்ந்த 30 வயதாகும் விஜய் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்தநிலையில் செல்பியா மேரிக்கும், விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால், இருவரையும் குடும்பத்தினர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதனால் செல்பியா மேரி, விஜய் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரவர் குடும்பத்தினரை விட்டு வீட்டீலிருந்து வெளியேறிய அவர்கள் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் செல்பியா மேரி திடிரென , தனது தோழி ரேகாவுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்.அதில் அவர், “என் குடும்பத்தினர் எங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள்.
அதனால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம்” என கூறிய நிலையில் வீட்டில் விஜய் மற்றும் செல்பியா மேரி தற்கொலை செய்து கொண்டனர்.
பின்னர் இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழி உடனே பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். காதல்மோகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-பவானிகார்த்திக்