தங்கம் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..! இன்று ஒரு சவரன்..?
ஆடி மாதம் தொடங்கியதும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் என்று சொல்லுவார்கள்.., ஆனால் இன்று வரை தங்கள் விலை குறையாமல் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கிறது.
நேற்று முன் தினம் 80 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 44,416 ரூபாய்க்கும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,552 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் உயர்ந்து 4,548 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து 36,384 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 80.40 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி 80,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.