இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் சந்திராயன் 3 விண்கலம் – மூளையாக செயல்பட்ட தமிழர்..
சந்திராயன் -2 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்று பாதையை சென்றடைந்தது. எனினும் தொழில்நுட்பக் கோளாரால் திட்டமிட்ட படி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயல் இழந்துவிட்டது.
அதே சமையம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆரிபிட்டர் நிலவில் வெற்றிகரமாக கால் பாதித்தது. இதனை தொடர்ந்து இஸ்ரோ 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் -3 யை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எம்.வி.எம் 3, மற்றும் எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது தளத்தில் ஜூலை 14ம் தேதி மதியம் 2:35 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இறுதி கட்ட வேலைகளை நேற்று செய்து முடித்துள்ளனர். இந்த திட்டத்தில் நம் இந்தியாவை சேர்ந்த ஒருவர் செயலாற்றி அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளில் ஒருவராக வீரமுத்துவேல் என்பவர் சந்திராயன் 3 மிஷினில் பின்னணியில் இருந்துள்ளார். இவரின் சொந்த ஊர் விழுப்புரம் இவர் ஐஐடியில் படித்த மாணவர்.., சந்திராயன் 2 திட்டத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். சந்திராயன் 2 திட்டத்தின் இயக்குனராக இருந்தவர் வனிதா.., அவருக்கு பதிலாக தான் வீரமுத்துவேல் சந்திராயன் 3 திட்டத்தில் திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் இவர் தென்னக ரயில்வேயில் டெக்னீஷியனாக பணி புரிந்தவர். அவர் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். வீரமுத்துவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்தவர்.., பின் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கில் இன்ஜினியரிங் படித்துள்ளார். அதை தொடர்ந்து சென்னை தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். சென்னை ஐஐடியிலும் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.
பட்ட படிப்புகளை முடித்ததும் அரசாங்க வேலை கிடைத்துள்ளது ஆனால் இவர் அதை நிராகரித்துள்ளார். சிறு வயதில் இருந்தே இவரின் கனவு இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர வேண்டும் என்பது மட்டும் தானாம், எனவே 2014ம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்துள்ளார். பின் 2019ம் ஆண்டு இஸ்ரோவில் துணை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். தற்போது சந்திராயன் – 3 விண்கலம் விண்ணில் செல்வதற்கும் அதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
Discussion about this post