கண் இமைக்கும் நொடியில் பறிக்கப்பட்ட செல்போன்..!! இந்த பகுதியில் கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே..!!
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் பூமாலை வாங்க சென்ற நபர் சட்டை பையில் இருந்த செல்போன் நூதன முறையில் திருட்டு. சிசி டிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் கேசவக்குமார். இவர் கடந்த 13ஆம் தேதி காலை துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேருந்து நிலையம் முன்பு சி.எல் சாலையில் உள்ள பூக்கடை ஒன்றில் பூ மாலை வாங்க நின்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது கேசவகுமார் அருகில் வந்து நின்ற மர்ம நபர் ஒருவர் கேசவக்குமார் பூமாலை வாங்க கையே நீட்டியபோது அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 1லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் நிறுவன செல்போனை நூதன முறையில்திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்தார்.
கேசவகுமார் பஜார் பகுதிக்கு சென்று அங்கே தன்னுடைய செல்போன் சட்டை பக்கெட்டில் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மீண்டும் பூக்கடைக்கு சென்று அங்கே புறுத்தப்பட்டு இருந்த சிசி டிவி பதிவு காட்சிகளை பார்த்துள்ளார். அதில் மர்ம நபர் ஒருவர் அருகில் வந்து நின்று பூ கடைக்காரரிடம் இருந்து பூ மாலை வாங்கும் போது நூதன முறையில் சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போன் திருடியது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சிசி டிவி பதிவு காட்சிகள் ஆதாரமாக கொண்டுநகர காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூதன முறையில் செல்போன் திருட்டு சிசி டிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..