மணிமேகலை பிரியங்கா பிரச்சனை.. ரூட்டை மாற்றும் குரேஷி..!
பிரபல விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலையும் குக்காக இருந்த பிரியங்காவும் கடந்த வாரம் நிகழ்ச்சியில் கருத்து வேறுபாடுடன் சண்டையிட்டு கொண்டதும் மேலும் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்தே அதே கணம் வெளியேறியதும் தான் பெரும் பரப்பரப்பாக மக்களிடையே பேசுப்பொருளாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது இதுகுறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் குரேஷி இந்த பிரச்சனை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அவற்றை பற்றி இப்போ பார்க்கலாம்.
குக் வித் கோமாளியில் அன்று நடந்தது என்னவென்றால், அன்று நிகழ்ச்சியில் திவ்யா துரைசாமி எலிமினேட் செய்யப்பட்டார். அப்போது திவ்யா துரைசாமி அவர்கள் அங்குள்ள அனைவரை பற்றியும் பேசினார். அடுத்தாக பிரியங்கா அவர்கள் நான் திவ்யா துரைசாமி பற்றி பேசலாமா எனக் கேட்டார். அதற்கு தொகுப்பாளரான ரக்ஷன் ஓ.கே என கூறினார் ஆனால் மணிமேகலை அவர்கள் எதுவும் சொல்லவே இல்லை தொடர்ந்து பிரியங்கா திவ்யா துரைசாமி அவர்களை பற்றி பேசினார். உடனே குறுக்கிட்ட மணிமேகலை, நீங்க பேச வேண்டாம் பிரியங்கா ஏற்க்கனவே நீங்கள்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளனி என பேசி வருகிறார்கள் எனவே நீங்க பேச வேண்டாம் என கூறினார்.
மணிமேகலை இப்படி பேசியது அங்குள்ள அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. குக் வித் கோமாளியில் அனைவரும் ஒரு குடும்பமாக இருக்கும் சமயத்தில் மணிமேகலை அவர்கள் ஏன் இப்படி பேசினார் என அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பிரியங்கா அவர்கள் வாயை திறக்காமல் அப்படியே வெளியேறினார்.
பின் அடுத்த வாரம் நடந்த ஹூட்டிங்கில் பிரியங்கா முன்பு நடந்த நிகழ்வை பற்றி பேசவிட்டு பின் தொடங்கலாம் என நினைத்தார். அங்குள்ள போட்டியாளராக என் பேச்சுரிமை தடுக்கப்பட்டதாக பேச நினைத்தார். அதனை பற்றி பேசினார் ஆனால் மணிமேகலை இதனை ஏற்க முடியாது, நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை அப்படி செய்யமாட்டேன் எனக் கூறிவிட்டு கேரவனுக்கு சென்றுவிட்டார். அப்போ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு ஹூட்டிங்கே நடக்கவில்லை.
அந்த நிகழ்வை பற்றி யாரும் மன்னிப்பு கேட்கவில்லை ஆனால் மணிமேகலை அவர்கள் இங்கு சுயமரியாதை எனும் விஷயத்தை கொண்டுவருகிறார். அவர்கள் இருவருக்கும் பிரச்சனை இருந்தால் அது அவர்களே தனியாக பேசியிருக்கலாம் ஆனால் அதை செய்யவில்லை. அன்று நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர்கள் வருகிறார்கள் ஜாலியாக இருக்கலாம் என நாங்கள் நினைத்தோம் ஆனால் அவர்கள் என்ன இங்கு சண்டையெல்லாம் நடக்குது என பேசினார்கள். இதெல்லாம் தான் அன்று நடந்தது என குரேஷி கூறினார்.
ஆனால் பிரியங்கா அவர்கள் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.