விஜய் தேவர் கொண்டாவுக்கு செக் வைத்த பிரபலம்..!!
“குஷி” படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து ஒரு கோடி ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க போவதாக நடிகர் “விஜய் தேவர் கொண்டா” அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தாங்கள் இழந்த 8 கோடியை தருமாறு “வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்” படத்தின் “தயாரிப்பாளர்கள்” அவரை வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. இந்த படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்ப ட்டது. இதை தொடர்ந்து “கீத கோவிந்தம்” படத்தின் மூலம் ஏராளமான பெண் பக்தர்க ளை கவர்ந்தார்.
அதிக பணம் போட்டு எடுக்கப்பட்ட “லைகர்” படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதே போன்று “வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்” படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான குஷி திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை வெளிப்படுத்தும் விதமாக விஜய் தேவர் கொண்டா 100 குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் தரும் விதமாக, 1 கோடியை வழங்குவதாக விஜய் தேவரகொண்டா அறிவித்தார். இதனால் அவரது இமேஜ் சற்று உயரத் தொடங்கியது.
Dear @TheDeverakonda ,
We lost 8 crs in the distribution of #WorldFamousLover, but no one responded over it!!Now as you are donating 1CR to the families with your big heart, Kindly requesting & Hoping for you to save us and our Exhibitors & Distributors families also 🤗❤️… pic.twitter.com/dwFHytv1QJ
— ABHISHEK PICTURES (@AbhishekPicture) September 5, 2023
ஆனால் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படத்தின் தயாரிப்பாளர்கள் அந்த படத்தின் மூலம் எங்களுக்கு 8கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது, அதை முதலில் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என விஜய் தேவர் கொண்டாவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர், இது விஜய் தேவர் கொண்டாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post