டீனேஜ் பெண்களை கவரும் கேப்கவுன்..
சில விஷேசங்களுக்கு செல்லும் பொழுது என்றும் மாடர்னாக செல்ல விரும்புகீறிர்களா, அப்போ உங்களுக்கு தான் இந்த குறிப்பு.., அதி வேகமாக பெண்களை கவர்ந்து வரும் இந்த கிராப்கவுன் உடலை சுற்றி வளையமாக டிசைன் செய்யப்பட்டிருக்கும்.
இந்த வகை கேப்கவுன் களை ஒல்லியான பெண்கள் மற்றும் உடல் பருமனான பெண்கள் என யார் வேண்டுமானாலும் அணியலாம். அப்படி எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கும் கேப் கவுன் டிசைன்கள் பற்றி
பார்க்கலாம்.
போட் நெக் கேப் கவுன் : இந்த வகை கேப் கவுன்களில், நெக் ஓவல் வடிவில் இருக்கும். கழுத்து நீளமாக உள்ள பெண்களுக்கு இந்த வகை கவுன்கள் ஏற்றது.
ஒன்சைடு ஸ்லீவ் கேப் கவுன் : ஒன்சைடு ஸ்லீவ் கேப் கவுன்கள் பார்ட்டிகளுக்கு ஏற்றது. இந்த வகை கவுன் ஒரு சைடு ஓப்பன் ஆகவும், உடல் முழுவதும் முடியும் இருக்கும்.
அன்பார்லல்ட் கிராப் கவுன் : இந்த வகை கேப் கவுன்கள் சமமான அளவில் இல்லாமல், முன் புறம் ஏற்றமாகவும், பின் புறம் இறக்கமாகவும் இருக்கும்.
டிசைனர் கேப் கவுன் : டிசைனர் கேப் கவுன்கள் பொறுத்தவரை நெட், எம்பிராய்டரி, மற்றும் கிறிஸ்டைல் போன்ற டிசைன்களில் கிடைக்கும். இந்த வகை கேப் கவுன்கள் உயர்ந்த லுக்கை தரும்.
மற்ற டிசைனர் கேப் கவுன்களை விட இந்த வகை கேப் கவுன்களின் விலை அதிகமாக இருக்கும்.