பாத்ரூமில் பாட்டு பாடிக்கிட்டே குளிச்சா இவ்வளவு நன்மை கிடைக்குமா..? வாங்க பார்க்கலாம்..!
குளியலறையில் குளிக்கும் போது பலருக்கும் பாட்டு பாடி கொண்டே குளிப்பது பழக்கமாக இருக்கும். அப்படி பாடிக்கொண்டே குளிப்பது உற்ச்சாகத்தை ஏற்படுத்தும்.
குளியலறையில் பாட்டு பாடும் போது நம் குரலே எதிரொலிக்கும். உங்கள் குளியலறையில் இருக்கும் கண்ணாடிகள், மேற்பரப்புகள் தனித்துவமான ஒலிக்காட்சிகளை உருவாக்கும்.
நம் ஒலி அலைகள் சுவரில் பட்டு பல பிரதிபலிக்கும். இது ஒரு புதுவித புத்துணர்வை கொடுக்கும்..,
நம் எல்லோருக்கும் மழையில்நனைந்து கொண்டே பாடவும் ஆடவும் பிடிக்கும். ஏனெனில் மழையில் பாட்டு பாடிக் கொண்டே ஆடுவது மிகுந்த மன அழுத்தத்தை குறைக்கம்.
அதே போல் குளியலறையில் குளிக்கும் போதும் பாட்டு பாடிக் கொண்டே ஆடுவது ஒரு வித சந்தோஷத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
குளியலறை ஒவ்வொருவரின் தனிப்பட்ட இடமாகும். இங்கு எந்த வித தடையும் இன்றி நம் இன்பம், துன்பம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.
குளிக்கும் போது பாடுவது அதிக நம்பிக்கை ஏற்படுத்தும். இது குரல் திறனை ஊக்குவிக்கிறது. உளவியல் ரீதியாக மனதிற்கு ஆறுதல் தருகிறது.
குளியலறையில் பாடுவதால் மன அழுத்தம் குறைத்து, நேர்மறையான மனநிலையை கொடுக்கிறது. இது அன்றைய நாளை மேம்படுத்தும்.., குளியலறையில் பாடுவதால் நம் திறன் மேம்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் மூளைக்கும் புத்துணர்வு அதிகரிக்கிறது.
குளியலறையில் பாடுவதாள் குழந்தை பருவ உணர்வை கொடுக்கிறது. இது உங்களுக்கு இனிமையான நினைவுகளை உண்டாக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர் .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..