உங்க அப்பாகிட்ட சொல்லி உங்களால இதை பண்ணமுடியுமா..? அமைச்சர் உதயநிதியை கடுப்பாக்கிய ராஜேஸ்வரி பிரியா..!
100 நாட்களில் 1 கோடி பெண்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கையெழுத்து வாங்கி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென கோரிக்கை வைத்தால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரின் அப்பாவிடம் சொல்லி டாஸ்மாக் கடைகளை மூடுவாரா என அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை கொடுத்தார்.
இந்த இயக்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. அதில் கலந்து கொண்ட இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது…
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் தனது முதல் கையெழுத்தையிட்டு தொடங்கி வைத்தார்..
தமிழகம் முழுவதும் இந்த கையெழுத்து இயக்கம் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள்.
50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்துக்களை வாங்கும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது…
மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இதுவரை 8 லட்சம் பேரிடம் இதுவரை கையெழுத்து வாங்கியிருப்பதாக சொல்லுகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த செயலை பாஜகவும் சில எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..
டாஸ்மாக் கடைகளில் தமிழகத்தில் மூட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்தது.. டாஸ்மாக்கை மூட பிரதமருக்கு மனமில்லை என ராஜேஸ்வரி உளறியுள்ளார்…
Discussion about this post