பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் திடீர் திருப்பம்..!
சென்னை பள்ளிக்கரணையில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்…
பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் 4வது தெருவை சேர்ந்த மதனகோபால் (வயது 46), சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவராக இருந்தார்..
இந்நிலையில் கடந்த 24ம் தேதி மாலை 5:30 மணிக்கு 15க்கும் மேற்பட்டோர் மதன் கோபலை தேடி அவரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது அவர் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியை தாக்கி கத்தி முனையில் மிரட்டியுள்ளனர்.
மிரட்டியது மட்டுமின்றி அவரின் வீட்டின் வெளியே பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர்..,
பதறிய அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளனர்.., புகாரின் பெயரில் அங்கு வந்த போலீசார்,
அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அபினேஷ் (வயது 19), தினேஷ் வயது (28), தீபன் ராஜ் (19), ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..