கர்ப்பிணி பெண்கள் லிச்சி பழம் சாப்பிடலாமா..?
கர்ப்பகாலத்தில் பல பெண்களுக்கும் இருக்கும் கேள்வி எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது என்று தான். காரணம் கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவும் குழந்தைக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் என்று தான்.
இன்று நாம் பார்க்க இருப்பது கர்ப்பிணி பெண்கள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? சாப்பிட்டால் அது குழந்தைக்கு நன்மையா அல்லது தீமையா என்று தான்.
* லிச்சி பழம் அதிக வெப்பமும், குளிர்ச்சியும், நீர்ச்சத்தும் நிறைந்த பழம், இதை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது அல்ல. இதை எடுத்துக்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, நிரிழிவை அதிகரிக்கும்.
* கர்ப்பகாலத்தில் லிச்சி பழத்தை எடுத்துக்கொண்டால் உடல் வெப்பத்தை அதிகரித்து விடும். மேலும் இது கர்ப்பகாலத்தில் பல சிக்கல்களை உண்டாக்கும். மேலும் தொண்டை புண், மூக்கில் ரத்தம் வடிதல், வாய்புண் போன்றவற்றை உண்டாக்கும்.
* கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோயை உண்டாக்கும். அந்த தன்மை லிச்சிக்கு உண்டு மேலும் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்கும்.
* கர்ப்பகாலத்தில் லிச்சி பழம் எடுத்துக்கொள்வதன் மூலம் பிரசவ நேரத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். குழந்தைகள் பிறக்கும் பொழுது நோய் தொற்றுடன் பிறக்கும்.
* மேலும் அதிக லிச்சி எடுத்துக்கொண்டால் ஒவ்வாமை நோயை ஏற்படுத்தும்.
* கர்ப்பிணி பெண்கள் லிச்சி சாப்பிட ஆசைப்பட்டால் ஆறுமாதம் கர்ப்பத்திற்கு பிறகே எடுத்துக்கொள்ளலாம்.., அதுவும் வாரத்திற்கு ஒன்று தான்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..