பைக்காரா படகு இல்லம் திறப்பு..! மூடப்பட்டதற்கான காரணம்..? விளக்கம் கொடுத்த வனத்துறை..!
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில்., கூடலூர் செல்லும் சாலையில் வனப்பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள அணை தான் பைக்காரா அணை. இந்த அணையில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுவது மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவும் மிக உதவியாக இருந்து வருகிறது..
மேலும் பைக்காரா அணையில் படகு சவாரி செய்யப்பட்டு வருகிறது வார நாட்களில் 5000 சுற்றுலா பயணிகளும்.., வார இறுதி நாட்களில் 10ஆயிரம் சுற்றுலா பயணிகளும்., கோடை விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து காணப்படும் என வனத்துறையி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் தான் குண்டும் குழியுமாக இருந்த சாலையை மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 3 கோடி ரூபாய் செலவில் சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.. அந்த பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று.., சாலைகள் மட்டுமின்றி பைக்காரா படகு சவாரியும் சீரமைக்கப்பட்டு இன்று திறக்கப்படவுள்ளது..
மேலும் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டமைப்பில் திறக்கப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..