BSNL Mother Day Special Offer 2025
2025 அன்னையர் தினம் வரும் மே-11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) பொதுமக்களுக்கு குறிப்பிட்ட கால சலுகைகளை அறிவித்துள்ளது.
இது 07.05.2025 முதல் 14.05.2025 வரை அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் இந்த சலுகை கிடைக்கிறது. பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் செயலி அல்லது பிஎஸ்என்எல் இணையதளம் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் எஸ்டிவி- 599, பிவி-997 மற்றும் பிவி-2399 ஆகிய மொபைல் ப்ரீபெய்டு திட்டங்களில் 5 சதவீத தள்ளுபடியைப் பெற முடியும்.
மேலும், நீண்ட கால மொபைல் ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது: பிவி-1,499 இப்போது 365 நாட்கள் செல்லுபடியாகும் (கூடுதலாக 29 நாட்கள், 336 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது). பிவி-1999-ன் செல்லுபடிக் காலம் 380 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. (கூடுதலாக 15 நாட்கள்).
வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் செயலி மூலமாகவோ அல்லது https://portal.bsnl.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சில்லறை விற்பனையாளரின் மூலமாகவோ இந்த சலுகைகளைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. BSNL Mother Day Special Offer 2025