விமானத்தில் கிடந்த குப்பி…!! அதிர்ச்சியில் பயணிகள்..!! பரபரப்பான ஏர்போர்ட்..!!
துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிமருந்து குப்பி கிடந்துள்ளது.. இது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
கடந்த சில மாதங்களாகவே பள்ளி மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது.. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்தப்படும் சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது..
அதன் பின்னர் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 27 ம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிமருந்து குப்பியை எடுத்துள்ளனர்..
அதன் பின்னர் இதுகுறித்து., பைலட் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் உடனடியாக தரையிறக்கபட்டது.. அதன் பின்னர் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்..
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்., வெடிமருந்து குப்பி எப்படி உள்ளே வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..