இல்லத்தரசிகளுக்கு ஏற்ற பயனுள்ள குறிப்புகள்..!
அசைவ குருமா மற்றும் சைவ குருமா எதுவாக இருந்தாலும் முந்திரி பருப்பை ஊறவைத்து அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
மீந்துபோன பொரியல் இருந்தால் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் அந்த பொரியலை கலந்து ஆம்லெட் போட்டால் சுவையாக இருக்கும்.
மண்சட்டியை சமைப்பதற்கு எண்ணெய் ஊற்றுவதற்கு முன் நீண்ட நேரம் சூடு செய்யக் கூடாது.
ஏலக்காயை வறுத்து அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு ஸ்வீட் செய்யும்போது தூவலாம்.
பொரியல் மீந்துபோய்விட்டால் அதில் உப்பு, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து பகோடா போட்டால் சுவையாக இருக்கும்.
கல்லீரல் மற்றும் மஞ்சள் காமாலை பிரச்சனைகளுக்கு பாகற்காய் வத்தலை அடிக்கடி உண்டு வரலாம்.
கருணைக்கிழங்கு மற்றும் சேனைக்கிழங்கை சமைக்கும்போது புளி நீரில் வேகவைத்து சாப்பிட நாக்கிலும் வாயிலும் எரிச்சல் வராது.
வாழைப்போவை சுத்தம் செய்யும்போது அது கறுத்துப்போகாமல் இருக்க நறுக்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள்தூள் கலந்த நீரில் போடலாம்.
குக்கரில் செய்யும் கிளறிய சாதம் அனைத்திற்கும் மூடிய திறந்ததும் குழைந்து போகாமல் இருக்க எலுமிச்சை சாறை விட்டு இறக்க வேண்டும்.
ரிப்பன் பக்கோடா செய்யும்போது அந்த மாவில் பூண்டு மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை சேர்த்து பிசைந்து சுட்டெடுத்தால் நல்லா ருசியாக இருக்கும்.
பீட்ரூட் பொரியல் செய்யும்போது தேங்காய் துருவலுக்கு பதிலாக பொட்டுக்கடலை மாவினை தூவி இறக்கினால் சுவையாக இருக்கும்.
சமையல் அறையில் எறும்பு உள்ள இடத்தில் உப்பினை நீரில் கலந்து தெளித்து விட எறும்புகள் அண்டாது.