மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று ரத்த தான முகாம்..
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ரத்த தான முகாமை சென்னை போக்குவரத்து கழகம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து குரோம்பேட்டை ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் ரத்தம் கொடுதுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி நேற்றைய முன் தினம் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆலந்தூர், கலைஞர் நகர், தி.நகர், தாம்பரம், வடபழனி, பூவிருந்த்வேலி, அயனாவரம், ஆவடி, தண்டையார்பேட்டை, எண்ணூர், பெரும்பாக்கம் மற்றும் மாதாவரம் உட்பட 13 பணிமனைகளில், அப்போலோ மருத்துவமனை, செட்டிநாடு மருத்துவமனை மற்றும் பாலாஜி மருத்துவமனை சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்றுள்ளது.
இந்த 13 இடங்களில் நடைபெற்ற முகாமில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ரத்தம் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி ரத்தம் கொடுத்தவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதித்து அறிவுரை கூறி.., உடல் நலம் அதிகரிக்க ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.