சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடாவில், நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் மற்றும் ஒரு டிரைவர் வீரமரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கரின் தாண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில், நக்சல்கள் பதுங்கி உள்ளதாக உளவுத்துறையினர் தகவல் அளித்தனர்.
இதனடிப்படையில், போலீசின் ஒரு பிரிவான மாவட்ட ரிசர்வ் படையினர்(டிஆர்ஜி) அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
பிறகு பணியை முடித்துவிட்டு மின் சரக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தனர். அதில், ஒரு டிரைவர் மற்றும் 10 போலீசார் பயணம் மேற்கொண்டனர்.
வழியில், நக்சல்கள் மறைத்து வைத்திருந்த ஐஇடி வெடிகுண்டு வெடித்தில் வேனில் பயணம் செய்தவர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அங்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு, நக்சல்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சம்பவம் நடந்த பகுதி, மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 450 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
Discussion about this post