கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ராகுலின் ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார் அதற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாநில அரசுகளுக்கு ஒன்றை அரசு தோற்று பரவுதல் தடுப்பதை குறித்து வழிமுறைகளை வழங்கி வருகிறது. அதன்படி சுகாதார துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கும் ராஜஸ்தான் முதல்வருக்கும் ஒரு கடிதம் அனுப்பிருள்ளார். அதில், யாத்திரையில் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், யாத்திரையில் அனைவரும் தடுப்பூசி மற்றும் சானிடைசேர் பயன்படுத்த வேண்டும் அதற்கு சாத்தியம் இல்லை என்றால் டநாட்டின் நலன் கருதி யாத்திரையை தள்ளிவைக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜஸ்தான் முதல்வர் ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில் ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரை டிசம்பர் 21ஆம் தேதி காலையில் நிறைவடைந்தது, ஆனால் பாஜகவும் மோடி அரசும் இங்கு கூடியிருக்கும் பெரும் கூட்டத்தைக் கண்டு மிகவும் பயந்து மத்திய சுகாதார அமைச்சர் திரு. ராகுல் காந்திக்கு டிசம்பர் 20ஆம் தேதி கடிதம் எழுதுகிறார். அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை கண்டு பயந்து பாரத் ஜோடோ யாத்திரையை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என்பதை இது தெளிவாக காட்டுகிறது.இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் திரிபுராவில் ஒரு பேரணியை நடத்தினார், அங்கு கோவிட் நெறிமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. கோவிட் இரண்டாவது அலையில், வங்காளத்தில் பிரதமர் பெரிய பேரணிகளை நடத்தினார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் நோக்கம் அரசியல் இல்லை என்றால், அவரது கவலை நியாயமானது என்றால், அவர் பிரதமருக்கு முதல் கடிதம் எழுதியிருக்க வேண்டும். என்று அவர் பதிவிட்டுள்ளார்.