பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமறைவு..!! நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் பாஜகவின் செயலாளாரும் ஆவார். இவர் அவரின் சமூக வலைத்தளம் பக்கத்தில் மதுரை எம்.பி.வாசு வெங்கடேசன் குறித்து பதிவிட்டிருக்கிறார்.
அந்த பதிவில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளர் ஒருவரின் உயிர் பறிபோய் விட்டது என்றும். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் பதிவிட்டுள்ளார். உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசனமானது, துர்நாற்றம் வீசும் ஒன்று எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்த விவரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்படுவதை தொடர்ந்து அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் சென்னையில் வைத்து எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் சூர்யா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்து இட வேண்டும் என கூறி, நின்பந்தனை ஜாமினில் வெளியிட்டுள்ளார்.
ஆனால் சூர்யா ஆஜராகி கையெழுத்து இடவில்லை என கூறப்படுகிறது. எனவே போலீசார் சூர்யாவை தேடி வருகின்றனர். போலீசார் தேடிவரும் இந்நிலையில், சூர்யா டெல்லிக்கு சென்று அங்கே மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனுடன், தீட்சிதர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சிதம்பரம் கோவிலில் உள்ள தீட்சிதர்கள் பூணூலை காவல் துறையினர் அறுத்துவிட்டார்கள் எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவுகள் குறித்து எஸ்.ஜி.சூர்யாவிடம் விசாரணை நடத்த சிதம்பரம் போலீசாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. உத்தரவின் பெயரில் அங்கு சென்று போலீசார் பார்த்த பொழுது, எஸ்.ஜி.சூர்யா தலைமறைவாகி விட்டார் என போலீசார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது உடல்நலம் பாதிப்பு காரணமாக மதுரையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற ஜாமீன் மனுவை தளர்த்த வேண்டும் என எஸ்.ஜி.சூர்யா மனுதாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அந்த மனுவை மதுரை கிளை மாவட்ட நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும் நிபந்தனை மீறிய குற்றத்திற்காக எஸ்.ஜி.சூர்யா காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
Discussion about this post