உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று மீண்டும் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. 250க்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலை பெற்று மீண்டும் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 250க்கும் கூடுதலான இடங்களிலும் , காங்கிரஸ் 4 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 91 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஓரிடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.
ஆட்சி அமைப்பதற்கான இடங்களை காட்டிலும் பாஜக கூடுதலான இடங்களில் முன்னிலையில் உள்ளதால் மீண்டும் அங்கு அக்கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் காணப்படுகிறது.