புதுச்சேரி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவன் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சென்னையை சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ்(22). இவர், தனது நண்பர்களுடன் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பயணம் செய்த திமுக எம்.பி.என்.ஆர் இளங்கோ மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.