பெண்களிடம் சில்மிஷம் செய்யும் பாஜக நிர்வாகிகள்..!! அண்ணாமலை எடுத்த முடிவு..?
ஸ்பாவில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததற்காக பாஜக நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெண்ணிடம் “ஸ்பா லைசென்ஸ்” பெற்று தருவதாக கூறி ரூ.20 லட்சம் பணம் வாங்கியுள்ளனர், மேலும் அந்த பெண்ணை பணம்
கேட்டு மிரட்டியதோடு, ஸ்பாவிற்கு சென்று அங்குள்ள பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 29ம் தேதி சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்ததும் நீக்கிய தாக அண்ணாமலை உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் வி.சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சோமு ராஜசேகர் ஆகியோர் கட்சிக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எந்த வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி இருப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..