மதுபான கடைக்கு செல்ல வேண்டிய “பீரை” ரோட்டில் அபிஷேகம் செய்த டிரைவர்..!! வலைவீசி தேடும் போலிஸ்..!!
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடைக்கு பீர் லோடு ஏற்றிச்சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..
சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பீர் கம்பெனியில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மதுபான கடைக்கு பீர் லோடு ஏற்றிவந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் உள்ள சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறுகாயங்களுடன் தப்பியோடிய நிலையில் இவ்விபத்து குறித்த அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் லாரியை கிரேன் இயந்திரம் மூலம் பள்ளத்தில் இருந்து மீட்டு இவ்விபத்து குறித்து விசாரணை மேற்க்கொண்ட போது லாரி ஓட்டுநர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்தது விசாரணையில் தெரிய வந்தது மேலும் இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..