அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!! பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!
டெல்லி சுகாதார அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் பாஜகவிடம் மண்டியிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரை மார்ச் 21ம் தேதி இரவு கைது செய்தனர்.
இதே மதுபானக் கொள்கை வழக்கில் சில நாட்களுக்கு முன் பிஆர்எஸ் தலைவர் கேசி.ஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், டெல்லி முதல்வர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு இந்திய கூட்டணி காட்சிகள் மற்றும் உலக நாடுகளின் அதிபர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி,.. பாஜகவில் சேராவிட்டால் சிறை செல்ல நேரிடும் என பாஜக தரப்பில் பேரம் பேசியதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜ.க தரப்பு, அமைச்சர் அதிஷி-க்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது. மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து தெரிவித்துள்ளார்.அதில், அனைத்து அமைப்புகளும், பாஜகவிடம் மண்டியிட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையமும், பாஜகவிடம் மண்டியிட்டுள்ளது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
பாஜக வினர் புகார் பதிவு செய்த 12 மணி நேரத்தில் நோட்டீஸ் வருவாதாக குறிப்பிட்ட அவர், நோட்டீஸ் வெளியிடுவது தேர்தல் ஆணையமா அல்லது பாஜகவா என கேள்வி எழிப்பினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..