வினேஷ் போகத்துக்கு எதிராக களம் இறக்கப்பட்ட பாஜக வேட்பாளர்..! யார் இந்த யோகேஷ் பைரகி..!!
ஹரியானாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய மல்யுத்த வீராங்கனை “வினேஷ் போகத்” வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் கேப்டன் யோகேஷ் பைரகி போட்டியிடுகிறார்..
ஹரியானா சட்டசபை தேர்தல் :
ஹரியானா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.. ஹரியானாவின் தற்போதைய முதல்வராக நவாப் சிங் சைனி பதவி வகித்து கொண்டு இருக்கும் நிலையில் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த மாதம் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் வாக்குகள் ஆனது வருகின்ற அக்டோபர் 8 ம் தேதி வாக்கு முடிவுகள் வெளியாகும் எனவும் ஹரியான அரசு தெரிவித்துள்ளது..
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது… இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். இப்படி இருக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருகட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
காங்கிரஸ் வேட்பாளர் :
அந்த வகையில் காங்கிரஸ் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது..
நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸில் சேர்ந்த நிலையில் அவருக்கு ஜுலானா தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்..
ஜுலானா தொகுதி வேட்பாளர்கள் :
ஜுலானா தொகுதியில் பாஜக சார்பில் யாரும் போட்டியிடாமல் இருந்த நிலையில் இன்று ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 21 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.. அதில் ஜுலானா தொகுதியின் வேட்பாளராக கேப்டன் யோகேஷ் பைரகி களமிறக்கப்பட்டுள்ளார்..
யோகேஷ் பைரகி :
யோகேஷ் பைரகி இவர் ஹரியானா மாநிலத்தின் பாஜகவில் இளைஞர் பிரிவின் துணை தலைவராகவும், ஹரியானா பாஜகவின் விளையாட்டு பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் பதவிவகித்து வருகிறார்.
32 வயதான இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.. மேலும் இவர் பேரிடர் காலத்தில் பைலட்டாக பணியாற்றி அதிக கவனம் பெற்று வருகிறார்..
மழை வெள்ளம் சென்னையில் மூழ்கியபோது யோகேஷ் பைரகி மீட்பு பணியினரை அழைத்து வந்து பல உதவிகளை செய்துவந்தார்.. மேலும் நிவாரண உதவிகளையும் செய்து வந்தார்..
அதேபோல் கொரோனா காலகட்டத்தில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டு தாயகம் அனுப்பிவைக்க உதவினார்.. அதன் பின்னர் பாஜகவில் இவர் வந்தே பாரத் என்ற திட்டத்தில் சேர்ந்து.. தற்போது பாஜகவின் சட்டமன்ற வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.. இவர் ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தின் சாபிதான் பகுதியயை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..