பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று (மார்ச் 16) பதவியேற்கிறார்
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று, இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று (மார்ச் 16) பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளது.
எனவே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் பஞ்சாப் மக்கள் திரளாகப் பங்கேற்கும் படி முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் அங்கு சுமார் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விழாவில், டெல்லி முதல்வரம், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.