கருமாரியம்மனை வழிபட்டால் கிடைக்கும் பலன்..!!
ஆதிபராசக்தியின் மறு உருவமாக இருப்பவர் “கருமாரியம்மன்”. கிராமத்தில் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும், பலருக்கும் இஷ்ட தெய்வமாகவும்.., இருப்பவர் “கருமாரியம்மன்”.
கருமாரியம்மனை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்..? என்று பார்க்கலாமா..
கருமாரியம்மன் கோவில் சென்னை திருவேற்காட்டில் புகழ் பெற்றது. முக்கியமாக அடி மாதம் இக்கோவில் சிறப்பு மிக்கது, ஆடி மாதத்திலும் வெள்ளிக்கிழமை அன்று இவரை வணங்க பக்தர்கள் எங்கிருந்தும் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கி செல்வது வழக்கம்.
திருவேற்காட்டில் முக்கியமாக கருமாரியம்மனுக்கு தனிசன்னதி உண்டு. சிற்பம் மட்டும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். இவரை மரச்சிலை அம்மன் என்றும் அழைப்பார்கள். 63 நாயன் மார்களில் ஒருவராக மூர்க்க நாயனார் அவதரித்த இடம் தான் திருவேற்காடு.
இங்கு தேவி வேற்கண்ணியான கருமாரியம்மன் ஈசானிய பாகத்தில் அமர்ந்து, இச்சா சக்தியில் உருவாகி இங்கே நின்று கொண்டு இருக்கிறார். அதாவது அந்தரக் கண்ணியாக, ஆகாயத் கண்ணியாக, பிரமாண கண்ணியாக, காடு, மலை, நதி இவற்றில் எழுந்தருளி மூன்று கண்ணியாக மாறி, காமக்கண்ணி, விசாலாக்கண்ணியாக எழுந்தருளியுள்ளார், திருவேற்காட்டில் உருமாறி, கருமாரியாக எழுந்தருளியுள்ளார். என்பதே இக்கோவிலின் வரலாறு.
மரத்தால் உருவெடுத்து இருக்கும் கருமாரியம்மனை மனதார வேண்டி விட்டு.., அருகில் இருக்கும் உண்டியலில் பூட்டு போட்டு வழிபட்டு வந்தால், நினைத்த செயல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் இருக்கும் அம்மனை வழிபட்டால்.., குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும், வீட்டில் கடன் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்பதும் உண்மை.
கோவிலுக்கு சென்று வணங்காத பக்தர்கள் இனி இவரை சென்று வணங்கி பாருங்கள்..,
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post