உங்க வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க போறீங்களா..? அப்போ இது முக்கியம்..!
பொதுவாக வீட்டில் பொங்கல் பண்டிகை, வீட்டில் விசேஷம் மற்றும் துக்க நிகழ்வுகளின் போது வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது வழக்கமானது. அனைவரின் கண்களையும் கவரும் விதத்தில் எந்த நிறத்தில் அடிக்கலாம் என இப்போ பார்க்கலாம்.
பெயிண்ட் வகைகள்:
ஆட்டோ மொபல் பெயிண்டிங் வாகனங்களுக்கும் டெக்கரேடிவ் பெயிண்டிங் வீடுகளுக்கும் இன்டர்ஸ்டியல் பெயிண்டிங் பெரிய கம்பெனிகளுக்கும் அடிக்கப்படும். பழைய கார், பைக், பஸ் ஆகியவற்றிற்கு ரீ பெயிண்டிங் அடுக்கப்படும். வீடுகளில் இருக்கும் வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றிற்கு அடிக்கப்படும் பெயிண்டிங் பவுடர் கோட்டிங் பெயிண்டிங் ஆகும்.
பெயிண்ட் முக்கியத்துவம்:
ஒரு பொருளுக்கோ ஒரு கட்டிடத்திற்கோ பெயிண்டிங் ஒன்று தான் அழகு சேர்க்கக்கூடியதாக இருக்கும். எவ்வளவு பெரிய வீடானாலும் எந்தவொரு கட்டிடக்கலையிலும் வீடு கட்டினாலும் அதற்கு முழுமையான அழகு சேர்ப்பது பெயிண்ட் ஆகும்.
விலை குறைவான பெயிண்ட் காற்றுடன் வினைபுரிந்து உடல் நல கோளாறுகளை உண்டாக்கும் எனவே தரமான வகையில் பெயிண்ட் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
சுவரில் பெயிண்ட் அடிப்பதற்கு முன் நீர் எதிர்ப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும். வெளிச்சம் உள்ள அறைக்கு அடர் நிறங்களையும் இருண்ட அறைக்கு வெளிர் நிறங்களையும் பயன்படுத்த வேண்டும்.
பழைய பெயிண்ட் மேல் அப்படியே புதிய பெயிண்ட் அடித்தல் கூடாது. முதலில் சுவரை சுத்தம் செய்து பிரைமர் கோட்டிங் அடித்த பிறகு தான் பெயிண்ட் அடிக்க வேண்டும்.
சுவரில் இருக்கும் தூசிகளை அகற்ற ஈரமான துணி பயன்படுத்தலாம். அடர் நிறத்தில் இருக்கும் பெயிண்டிங் மேல் வெளிர் நிறத்தில் அடிக்கும்போது பிரைமரை பயன்படுத்த வேண்டும்.
பெயிண்டிங் வேலை ஆரம்பிக்கும்முன் அங்கிருக்கும் சாமான்களை அகற்ற வேண்டும் அல்லது படுதாவை போட்டு மூடி வைக்க வேண்டும். பெரிய இடங்களுக்கு ரோலரை பயன்படுத்தவும் முதல் முறை அடித்து காய்ந்ததும் மறுமுறை பார்த்து விடுபட்ட இடங்களையும் சேர்த்து அடிக்க வேண்டும்.
அடர் நிறத்திலிருந்து வெளிர் நிறத்திற்கு மாற்றும்போது பிரைமர் தேவைப்படும். அதே நிறத்திலோ அல்லது அடர் நிறத்திலோ அடிக்கும்போது பிரைமர் தேவையில்லை.
மேற்கூறிய வழிமுறைகளை பிண்பற்றினாலே குறைவான செலவில் தரமான பெயிண்டிங் அடிக்கலாம்.