அழகிய அலியா கட் குர்தா..!! பெண்கள் கவனத்திற்கு
அலியா கட் குர்தா மற்றும் அலியா கட் சல்வார்.., சமீபத்தில் ட்ரெண்டிங்கிள் உள்ளது. இந்த அலியா கட் குர்தா அதிகமாக இன்ஸ்டாகிராமில் விற்பனையாகி வருகிறது. ஃபேஷன் விரும்பிகளுக்கு ஏற்ற ஒன்றாக இந்த அலியா கட் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த அலியா கட்.., கழுத்து பகுதியில் “வி” வடிவிலும், இடைப்பகுதி ஹை வெய்ஸ்ட் கட் ஷேப்பீலும் இருப்பதால்.., பல பெண்களை கவரும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த அலியா கட் உடை உடுத்துபவர்களை எவ்வளவு அழகாக காட்டுகிறதோ.., அதே அளவிற்கு விலையும் உயர்ந்தது..
இந்த குர்திகளின் கட், முன்பக்கம் சற்று மேலே உயர்ந்தும்.., பின் பக்கம் சற்று கீழே இறங்கியும் இருக்கும். இது தான் இதனுடைய.. “ஸ்பெஷல்“. கடந்த ஆண்டு நடிகை ஆலியா பட், இந்த அலியா கட் உடையை உடுத்தி இருந்தார். அப்போது அவர் கர்பமாக இருந்த நிலையில் இந்த உடை.., வயிறு தெரியாதவறு இருந்ததால், அவர் அதிக முறை பயன்படுத்திய ஒரு பிரத்தியேக உடை என்றும் சொல்லலாம்.
மேலும் இந்த ரக உடைகள் ஒல்லியாகவும், உயரமாகவும் காட்டும் என்பதால் அனைவருக்கும் ஏற்ற ஒன்று.., எனவே இதை பல பெண்கள் விரும்பி உடுத்துவதால் இந்த உடை ட்ரெண்டிங்கிள் உள்ளது. ஆனால் இதற்கு முன் இந்த உடைக்கு வெறும் குர்தா என்று மட்டுமே பெயர்..,
ஃபேஷன் உலகிற்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் இந்த ரக அலியா கட் ஏற்ற ஒன்று.., அது மட்டுமின்றி பல நடிகைகளும் விரும்பி உடுத்தும் ஒன்றாக இந்த அலியா கட் இருக்கிறது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் அழகு குறிப்புகள், மருத்துவ குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் உடைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..