உங்க சருமம் பொலிவடையனுமா..? அப்போ இந்த 3 ஸ்க்ரப் ட்ரை பண்ணுங்க..!
நம் சருமத்தில் இறந்த செல்கள் தங்கியிருக்கும் அதனை அகற்ற வாரத்திற்கு இரு முறை எக்ஸ்ஃபோலிஸ்ட் செய்தால் சருமம் பிரகாசமாக்கும்.
கெமிக்கல் சேர்க்காத வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே 3 வகையான ஃபேஷியல் ஸ்க்ரப்புகள் எப்படி தயாரிக்கலாம் என பார்க்கலாம்.
1. வாழைப்பழம், தேன் மற்றும் காபி ஃபேஷியல் ஸ்க்ரப்
வாழைப்பழம், தேன் மற்றும் காபி ஆகியவை சருமத்தை பளப்பளப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் நன்றாக பழுத்த ஒரு வாழைப்பழம் இரண்டு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
தயாரித்த இந்த ஸ்க்ரப்பை சுத்தம் செய்த முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரத்திற்கு ஊறவைத்து பின் தேய்த்து அலச வேண்டும். அவ்வளவுதான் அப்பறம் எப்படி முகம் பிரகாசிக்கும்னு பாருங்க.
2. தயிர் மற்றும் ஓட்ஸ் ஃபேஷியல் ஸ்க்ரப்
தயிர் சருமத்திற்கு ஊட்டமளிக்கக்கூடியது மற்றும் சருமத்தில் ஓட்ஸ் அழுக்குகளை நீக்கக்கூடியது. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 ஸ்பூன் தயிர் எடுத்துக் கொண்டு கலந்து ஃபேஸ்ட் செய்து முகத்தில் தடவி மசாஜ் செய்து சில நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்து பின் லேசாக வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை அலசி வர வேண்டும். முகம் கழுவியதும் சருமம் டோனர் மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் பொலிவாகும்.
3. மஞ்சள்தூள், தயிர், கடலைமாவு ஸ்க்ரப்
ஒரு பவுலில் 1 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் கடலைமாவு மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொண்டு முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அதனை அப்படியே சிறிது நேரத்திற்கு வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரினை கொண்டு கழுவ வேண்டும். இந்த செய்முறை சருமத்தில் கரும்புள்ளி, கருமை, முகப்பரு ஆகியவற்றை நீக்கக்கூடியது.
மேலே சொன்ன மூன்று வகையான பேஸ் ஸ்க்ரப் வகைகளும் எந்தவித கெமிக்கலும் சேர்க்காத ஆரோக்கியமான பொருட்களை வைத்து செய்யப்படுகிறது இதனால் சருமத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.