விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதை செய்தால் போதும்..!
ஆண்களின் விந்தணுக்கள் அதிகரிக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுதல் என்பது மிகவும் முக்கியம். குழந்தை பெற்றுக்கொள்ள விந்தணுக்கள் மிகவும் முக்கியமாகும். எனவே அந்த விந்தணுவை அதிகரிக்க செய்யும் உணவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- ஜிங்க் அதிகமாக இருக்கும் உணவு பொருட்களை ஆண்கள் சாப்பிடும்போது அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதுவே அதிகமான விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது. பட்டாணி, இறைச்சி ஆகிய உணவுகளில் ஜிங்க் அதிகம் இருக்கிறது.
- ஆண்களின் ஆரோக்கியமான விந்தணு வளர்ச்சிக்கு ஃபோலேட் முக்கியமானது. ஃபோலேட் அதிகம் இருக்கும் உணவுகள் தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள்.
- விந்தணுக்கள் அதிக நாட்களுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின் சி மிகவும் முக்கியம். அத்தகைய வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் தக்காளி, மிளகாய் மற்றும் சிட்ரஸ் பழங்கள்.
- விந்தணுக்களின் இயக்கத்திற்கு ஒமேகா 3 மிகவும் முக்கியம். ஒமேகா 3 அதிகம் உள்ள உணவுகள் ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள் மற்றும் மீன்கள்.
- வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1 உள்ளது. இது விந்தணுக்களின் உற்பத்திக்கு உதவுவதுடன், அது முன்னோக்கி நீந்தி செல்லவும் உதவியாக இருக்கிறது.
- முட்டையில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் புரதம் ப்ரீரேடிக்கலில் இருந்து விந்தணு பாதிக்கப்படாமல் காக்கிறது. இது விந்தணுக்களின் அதிகமான உற்பத்திக்கு உதவுகிறது.