கேரளாவில் 47 வயதில் பெண் ஒருவர் இரட்டை குழந்தை பெற்றுள்ளார். அந்த குழந்தையையும் பறிக்க எமன் முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் சாலக்குடியை சேர்ந்தவர் ஷாஜி. இவருக்கு தற்போது 53 வயதாகிறது. இவரது மனைவியின் பெயர் பேபி. இவருக்கு, 47வயதாகிறது. கடந்த 18 வருடங்களாக இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு பேபி கர்ப்பமடைந்தார். இதையடுத்து, திருச்சூர் அருகேயுள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்கா அனுமதிக்கப்பட்டார். அங்கு, பேபிக்கு கடந்த மே 15ம் தேதி இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
இதையடுத்து, ஷாஜி, பேபி தம்பதி மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த நிலையில், நேற்று முன்திகம் இரவு மருத்துவமனையில் இருந்து தனது நண்பர் கொண்டு வந்த மாருதி காரில் ஷாஜி, பேபி தனது இரு குழந்தைகள் மற்றும் மாமியர், பக்கத்து வீட்டு பெண் ஒருவருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பின்னால் , மற்றொரு காரில் மற்ற உறவினர்கள் வந்தனர். இந்த நிலையிர், அம்பல்லூர் என்ற இடத்தில் கார் சென்ற போது, திடீரென்று காரில் தீ பிடித்து புகை ஏற்பட்டது. இதை பார்த்த பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் உடடியாக காரை நிறுத்தினர். ஆனால், குழந்தைகள் இருந்த பின் சீட்டின் கார் கதவுகள் ஸ்டக் ஆகி விட்டதால் திறக்க முடியவில்லை. உள்ளே குழந்தைகளுடன் பேபியும் அவரின் தாயாரும் கதறினர்.
இதை பார்த்த லாரி டிரைவர் வெளியே இருந்து கதவை திறக்க முயன்றார். முடியவில்லை. ஜன்னலையும் திறக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், ஷாஜி கதவை திறந்து வெளியே வந்து பின்பக்க கதவை போராடி திறந்தார். உடனே, குழந்தைகளுடன் அனைவரும் வெளியேறினர். அடுத்த நிமிடமே அந்த கார் தீ பிடித்து முற்றிலும் எரிந்து போனது. இதை நேரில் பார்த்த அனைவரும் பதறிப் போனார்கள். குழந்தையை பெற்றேடுத்த பேபி மயங்கி விழுந்து விட்டார். தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு மற்றொரு காரில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
18 வயதுக்கு பிறகு கடவுள் கொடுத்த குழந்தைகளை இரக்கமே இல்லாமல் எமன் பறிக்க முயன்ற சம்பவம் கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.