35 லட்சத்தை எட்டும் ஆவின் பால்..! விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை..?
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் மற்றும் ஒன்றிய பொது மேலாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது..
ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்றைக்கு ஆலோசனை மேற்கொண்டோம்.
கூட்டுறவு துறைகள் மூலம் கொள்முதல் :
தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி கணிசமாக உயர்ந்து இருக்கிறது. ஆவின் பால் கொள்முதல் 34 லட்சத்தை தாண்டி 35 லட்சத்தை எட்ட உள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு தருகின்ற விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார்…
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தரத்திற்கு ஏற்ற விலை திட்டத்தை நிறைவேற்றியதன் காரணமாக வெளிமார்க்கெட்டில் தனியார் பால் கொள்முதல் செய்வதை விட விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் முதல் ஒன்றரை ரூபாய் வரை அதிகம் கொடுத்தும் அதே போல கூட்டுறவு துறைகள் மூலம் கொள்முதல் செய்யும் நிலை உருவாகி இருக்கிறது.
பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக இன்றைக்கு பல நிர்வாக ரீதியான முன்னேற்றங்களையும் பொருளாதாரத்தில் நல்ல சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது. விற்பனையை பொருத்தவரை கடந்த ஆண்டு விட 23 சதவீதம் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது…
கடந்த இரண்டு மாதங்களாக பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பாக அவர்களுக்கு நிலையான வருவாய் ஏற்படும் வகையில் மொத்த விற்பனையாளராக அவர்கள் மூலமாக ஆவின் பொருட்களின் விற்பனையானது ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் அளவில் விற்பனை நடந்திருக்கிறது.
அந்த விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கொடுப்பது போல் ஆவியின் மார்க்கெட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் உள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் அதில் இருக்கக்கூடிய அங்காடிகள் மூலமாகவும் பொருட்கள் விற்பனைக்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட துறையோடு பேசி வருகின்றோம். அதுவும் மிக விரைவில் தொடங்க இருக்கிறது என தெரிவித்தார்….
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆவின் நிறுவனத்தில் விவசாய பெருமக்களுக்கு கடன் வட்டி 15 சதவீதம் ஆக தேசிய மையம் ஆக்கப்பட்ட வங்கிகள் மூலம் 9% கடன் வழங்கி வருகின்றோம். இந்த ஆண்டு விவசாயிகளுக்கான கடன் அதிகரிக்க திட்டமிருக்கிறோம் என தெரிவித்தார்.
விவசாயிகளுக்கும் கால்நடை பராமரிப்புக்கும் வட்டி கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் தீவனங்கள் தரம் உயர்த்தப்பட்டு மார்க்கெட்டில் மிக குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புதிதாக 50 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி தொடங்கும் திட்டம் உள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளை மையப்படுத்திய ஆவின் பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு அதற்கான பணிகளை தொடங்க இருக்கிறோம் என கூறினார்..
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை அதை முடிந்த அளவுக்கு செய்து இருக்கிறோம். இன்னும் சில கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கையாளுவது சாதாரண விஷயம் அல்ல போக்குவரத்து, பால் சேமிப்பு வைப்பது பல பிரச்சனைகள் உள்ளது. அதனை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்.
கடந்த காலத்தை ஒப்பிடும்போது ஆவின் மிக முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் பால் உற்பத்தி வழங்கி வருகிறது. அமுல் நிறுவனம் நிறுவப்பட்டாலும் அதனால் ஆவினுக்கு பாதிப்பு ஏற்பாடது. ஆவினை விரிவுபடுத்த வேண்டும் வரும் கால கட்டத்தில் பால் அதிக அளவில் கொள்முதல் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.
அமுல் இங்கே வருகிறது என்றால் ஆவின் பால் உற்பத்தியை அங்கே தொடங்கலாம். அதனால் ஆவினுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் ஆவினை விரும்புகிறார்கள் ஆவினை நம்புகிறார்கள் மற்ற பொருட்களின் விலையை விட ஆவின் பொருட்கள் விலை குறைவு. ஒவ்வொரு பொருளுக்கும் தரமான உற்பத்தியை கொடுத்து வருகிறோம் என தெரிவித்தார். .
இந்த ஆண்டு இறுதியில் ஒரு நாளில் 40 லட்சம் லிட்டராக பால் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார். சில நேரங்களில் சில ஒப்பந்ததாரர்களால் பிரச்சனை ஏற்படுகிறது. அதை உடனடியாக சரி செய்து விட்டோம் அரை மணி நேரம் கால தாமதம் ஆனாலும் அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது.
அமெரிக்காவில் கூட ஆவின் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்வதற்கான லைசன்ஸ் இருக்கிறது. முதலில் இங்கே ஒரு நிலையான உற்பத்தியை கொடுத்துவிட்டு அதன் பிறகு வெளியே கொண்டு போலாம் பால் கொள்முதல் விலை ஆறு ரூபாய்க்கு ஏற்கனவே உயர்த்தி இருக்கிறோம்.
தற்பொழுது சூழலில் விவசாயிகளின் கோரிக்கையாக இருப்பது அந்த கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதுதான். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நுகர்வோருக்கு பாதிப்பு இல்லாமல் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படும்…
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 350-க்கும் மேற்பட்ட சொசைட்டிகளில் ஆவின் உற்பத்தியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்.. தொடர்ந்து செயற்கை முறை கருவூட்டலில் சிறப்பாக செயல்பட்ட சங்கத்திற்கு பரிசுத்தொகையாக பத்தாயிரம் ரூபாய் காசோலையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்..
திமுக வெற்றியைத் தடுக்க அதிமுக நாதக முயற்சி..! ஜரூரா-க களமிறங்கிய தலைகள்..?
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..