திமுக வெற்றியைத் தடுக்க அதிமுக நாதக முயற்சி..! ஜரூரா-க களமிறங்கிய தலைகள்..?
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் செயல்பட தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் வலிமையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் என்றும் நீடிக்கும்.
இப்படி இருக்க மற்றொரு பக்கம் கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தனித்து போட்டியிட்டது. ஆனால் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
ஆனால் 2026-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தாலும் இரு கட்சிகளுக்கும் பயன் இல்லை என சொல்லப்படுகிறது. அதிமுகவும் தற்போதைக்கு 8 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் திமுக கூட்டணியின் வெற்றி வேகத்தைத் தடுக்க முடியும் என அவர்கள் சிந்திப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்து, அவர்களுக்கு எம்.எல்.ஏக்கள் அதிகரித்து விடுவார்கள் இதனால் நாம் தமிழர் கட்சி அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
அதே சமயம் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதன் முறையாக போட்டியிடவுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் நாம் தமிழர் பேச்சு வார்த்தை நடத்திய போது.., கூட்டணி வைக்க போவதில்லை என தவெக தெரிவித்துள்ளது..
காரணம் தனித்து போட்டியிட்டால் மட்டுமே தோல்வி அடைந்தாலும் எந்த தொகுதியில் எவ்வளவு வாக்குகள் கிடைக்கிறது.. அடுத்த தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற முடியும் என பார்க்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணிக்கு 200+ இடங்கள் :
அதிமுக – நாம் தமிழர் கூட்டணி அமையாமல் போனால் அதாவது திமுக தலைமையிலான தற்போதைய கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் கட்சிகள் தனித்து போட்டியிட்டாலும். அதிமுக – பாஜக கூட்டணியோடு போட்டியிட்டாலும், திமுக எளிதாகவே 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெரும் என ஒரு கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கூட்டணி பாவச் செயல் அல்ல, வாக்கு வங்கி அரசியலில் “கூட்டணி” ஒரு பாவம் அல்ல அரசியலுக்கு வந்த பின் தோல்வியை கண்டு பின் வாங்க கூடாது என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..