ஜனாதிபதிகள் பெற்ற பரிசுகள் ஏலம்..! லட்சம் கணக்கில் விலை போகும் பரிசு பொருட்கள்..!!
ஜனாதிபதி களுக்கு பரிசாக வந்த ஓவியம், சிலை உள்ளிட்ட 250 பொருட்கள் ஏலம் விடப்படுவதாக ஜனாதிபதி மாளிகை முடிவு செய்யப்பட்டுள்ளது..
ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதிகள் பெற்ற பரிசுகள் என்று 250 பரிசுகளை தேர்வு செய்து அவற்றை ஏலம் விடுவதற்கு ஜனாதிபதி மாளிகை முடிவு எடுத்துள்ளது. இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஷெல் கிராப்ட் ஓவியம் மற்றும் புத்தர் சிலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த பரிசு பொருட்களை https://upahaar.rashtrapatibhavan.gov.in/ என்ற பிரத்யேக போர்டல் வழியாக ஏலம் எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேதாஜியின் ஓவியத்தின் அடிப்படை விலையாக ரூ. 4,02,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதே போல் முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, அப்துல்கலாம் உள்ளிட்டோர் பெற்ற பரிசு பொருட்களும் ஏலத்தில் விற்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ம் தேதி வரை ஏலம் எடுக்கலாம் எண்று அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அதிக விலைக்கு ஏலம் எடுத்தவர்களுக்குப் பொருள்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் . ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..