உயரம் குறைந்த பெண்கள் கவனத்திற்கு; புடவையில் நீங்க உயரமாக தெரிய இதை ட்ரை பண்ணுங்க..!
பொதுவாகவே பெண்களுக்கு புடவை என்றால் பிடிக்கும்.., ஆனால் உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு புடவை அணிய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், கட்டிய பின் இன்னும் உயரம் குறைவாக தெரிவோமோ என்கிற கவலையும் இருக்கும்.
அப்படி நீங்கள் இதை நினைத்து கவலைப்படும் பெண்களாக இருந்தால், இதை ட்ரை பண்ணுங்கள்..
* உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் பெரிய பார்டர் வைத்த புடவைகள் கட்டுவதை தவிர்க்கலாம், இது அவர்களின் உயரத்தை இன்னும் குறைவாக காட்டும்.
* உயரம் அதிகமாக தெரிய சிம்பிளான மற்றும் மெல்லிய பார்டர் வைத்த புடவைகளை கட்டினால் உயரம் குறைவாக இருப்பது தெரியாது.
* பெரிய ப்ரின்ட்கள் மற்றும் டிசைன்கள் இருக்கும் புடவைகளை தவிர்க்கலாம், அதற்கு பதிலாக சிறிய பிரின்ட் மற்றும் பிளைன் ஒர்க் சாரிகளை காட்டினாள் உயரமாக தெரியும்.
* புடவைகேற்ற பிளவுஸ் அணிய வேண்டும். அதற்க்கு மாற்றான பிளவுஸ் அணிந்தால் அழகை கெடுத்துவிடும்.
* உயரம் குறைந்த பெண்கள் லாங் நெக் பிளவுஸ், வி வடிவ பிளவுஸ், மற்றும் பின்புறம் முழுவதுமாக மூடி முன்புறம் வி வடிவில், அல்லது லோ நெக்கில் பிளவுஸ் அணிந்தால் உயரமாக காட்டும்.
* கருப்பு நிற புடவை உங்களை ஒல்லியாக காட்டுவதுடன், உயர்வாகவும் காட்டும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post