ஜிம்முக்கு செல்லும் நண்பர்கள் கவனத்திற்கு..! முட்டைக்கு மாற்றாக புரதம் நிறைந்த 6 உணவு பொருள்கள்..?
ஜிம்முக்கு செல்லும் நண்பர்கள் கவனத்திற்கு..! முட்டைக்கு மாற்றாக புரதம் நிறைந்த 6 உணவு பொருள்கள்..? எது என தெரிந்துக்கொள்ள இங்கே படியுங்கள்.
ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைக்க செல்பவர்களாக இருந்தாலும் சரி, உடல் எடையை அதிகரிக்க செல்பவர்களாக இருந்தாலும் சரி. சரியான ஊட்டச்சத்து உணவுகள், புரத உணவுகள் எடுத்துக்கொள்வது, மிக முக்கியமான ஒன்று.
ஜிம்மில் சேர்ந்த உடன், ஜிம் பயிற்சியாளர் உணவுமுறை பற்றி தான் முதலில் பரிந்துரை செய்வார். முட்டை, சிக்கன்.., என அசைவ உணவுகள் அதிகமாக எடுத்துக்கொள்ள சொல்லுவார்.
ஆனால் காய்கறியிலும் புரதச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது என எத்தனைப் பேருக்கு தெரியும்..? அதை எத்தனை பேர் பின் பற்றுகிறோம்.
புரதச்சத்து நிறைந்த சில முக்கிய காய்கறிகளை பற்றி பார்க்கலாம்.
பட்டாணி : பட்டாணி புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒன்று. இதில் கொழுப்புச்சத்து குறைவாகவே காணப்படும்.

மேலும் இதில் தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. பட்டாணியை உணவில் சேர்த்துக் கொண்டால், வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
பரட்டைக்கீரை : பரட்டைக்கீரை எனப்படும் கேல், புரதச்சத்துக்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது. மேலும் இதில் ஒமேகா 3, ஒமேகா 6, கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீஷியம், மாங்கனீசு,

மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி , வைட்டமின் பி6 இருக்கின்றது. லுடீன் மற்றும் ஜியாக்ஸாந்தின் சக்தி அதிகம் இருப்பதால் கண்களில் புரை ஏற்படாமல் காக்கும்.
மக்காச்சோளம் : மக்காச்சோளம், மற்றும் ஸ்வீட் கார்ன், பேபி கார்னில் , கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் காணப்படும்.

சோளத்தில் தியாமின், வைட்டமின் சி, வைட்டமின் B6, மற்றும் மெக்னீஷியம், பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் உடலை வலுவுற செய்கிறது.
காலிப்பிளவர் : மலிவான விலையில் கிடைக்கும் காய்கறியில் காலிப்பிளவர் முக்கியபங்கு வகிக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு சத்து அதிகம் இருப்பதால்

புற்றுநோய் எதிர்த்து போராட செய்கிறது. மேலும் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கு கிறது.
முட்டைகோஸ் : நார்ச்சத்து, புரதச்சத்து, மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்த இந்த முட்டைகோஸ்

மூளையை என்றும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. முட்டைகோஸும் புற்றுநோயிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
புரோக்கோலி : புரோக்கோலியில் அதிகம் புரதமும், குறைந்த அளவில் கொழுப்பும் இருப்பதால், ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்க செய்கிறது.

ஜிம்மில் உடற்பயிற்சிக்காக வெயிட் அதிகமுள்ள பொருட்களை தூக்கும் பொழுது மூச்சு இளைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post