திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!
திருப்பதி அலிபிரி மலைப்பகுதியில் பாத யாத்திரை சென்ற 6 வயது குழந்தையை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியில் இருக்கும் சிறுத்தைகள் திருப்பதிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களை அச்சுறுத்தி கொலை செய்வதாகவும்.., அலிப்பிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் புலி நடமாட்டம் இருப்பதாக.., திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அலிப்பிரி முதல் காலிகோபுரம் வரை உள்ள பகுதியில் வாகனங்கள் அதிகம் இயக்கப்படுகிறது.., குறிப்பிட்ட இந்த மூன்று இடத்தில் மட்டும் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் பல பக்தர்களுக்கு அதுக்கு பலியாவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் வேதனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி மலைப்பகுதி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 22ம் தேதி ஒரு சிறுத்தையும், ஆகஸ்ட் 14ம் தேதி ஒரு பெண் சிறுத்தையும்.., நேற்று இரவு ஒரு சிறுத்தையையும் வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
மூன்று சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் இன்னும் ஒரு சிறுத்தை மட்டும் சிக்காமல் இருந்து வருகிறது.., அதனை பிடிப்பதற்காக வனத்துறையினர் முயற்சிப்பாதகாவும்.., இந்த ஒரு சிறுத்தை மட்டும் இரவில் நடமாடுவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும்.., முக்கியமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால்.., பக்தர்கள் இரவு பயணத்தை அலிப்பிரி பகுதியில் தவிர்க்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..