ஆருத்ரா மோசடி கும்பலை பிடிக்க தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவு..!
ஆருத்ரா மோசடி கும்பலை பிடிபதற்காக துபாய் அரசுடன் தமிழ்நாடு காவல்துறை ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை சூளைமேட்டை தலைமை இடமாக வைத்து செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி மக்களிடம் இருந்து 2438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது பொது மக்கள் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளனர், ஆருத்ரா நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரை வைத்து 21 பேரை கைது செய்துள்ளனர்.
ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள் ராஜசேகர், மற்றும் அவரின் மனைவி மகாலட்சுமி ஆகியோரை கைது செய்ய இருந்த நிலையில் இருவரும் துபாய்க்கு தப்பி சென்றுள்ளனர். இன்டர் போல் எனும் சர்வதேச பொலிசாரின் உதவியை நாடி லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இவர்களை கைது செய்வதற்காக ராஜசேகர் மற்றும் மகாலட்சுமி குறித்த விவரங்களை துபாய் அரசு சேகரித்து வருவதாகவும், கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசுடன் துபாய் அரசு ஒப்பந்தம் வைத்துள்ளதால் அந்த மோசடி கும்பலை வெகு விரைவில் பிடித்து விடுவோம் என பரஸ்பர ஒப்பந்தம் அளித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..