தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தற்போது தனக்கான உறுதியான கதாபாத்திரங்கள் இருக்கும் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக கதையில் முக்கிய கதாபத்திரம் உள்ள படங்களிலே நடித்து வருகிறார்.
மாயா,டோரா,இமைக்கா நொடிகள்,நெற்றிக்கண் மற்றும் கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில் அவரின் அடுத்த படமான கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அஸ்வின் சரவணன் விக்னேஷ் இயக்கி சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சுர்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இந்த படத்தில் னுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்,
இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் நடைபெறும் இந்த கதைக்களத்தில் நயன்தாராவின் மகளுக்கு பேய் பிடிக்கிறது. ஆனால் உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத தருணத்தில் இந்த சூழலை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதை சுவாரஸ்யமாக திரைப்படமாகியுள்ளோம் மேலும் 99 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் இடைவெளி இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் நயன்தாரா பிறந்த நாள் அன்று வெளியிட உள்ளதாகவும் படத்தை டிசம்பர் 22ம் தேதி வெளியிட இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Discussion about this post